Maalaimalar
Home > ஆன்மிகம் > கோவில்கள் > மருதனார்மடம் ஆஞ்சநேயர்…
கோவில்கள்
மருதனார்மடம் ஆஞ்சநேயர் திருக்கோவில்- யாழ்ப்பாணம்
மருதனார்மடம் ஆஞ்சநேயர் திருக்கோவில்- யாழ்ப்பாணம்
By – மாலை மலர்
Published On 2022-12-23 05:22 GMT | Update On 2022-12-23 05:22 GMT

இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது.
எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.
மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் “ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்” ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர்