எமது சபையினால் வீடுத் திருத்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த திட்டம் மேற்கொள்ளும் போது எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட வறிய குடும்பம் ஒன்று வீடு அமைந்துள்ள காணி உறுதியை அடைமானம் வைத்து மீட்க முடியாமல் இருப்பது கண்டறியப்பட்டு, வலிகாமம் தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் ஒருலட்சம் ரூபாய் தனிப்பட்ட நிதியாக சேர்க்கப்பட்டு, குறித்த குடும்பத்திற்கு அந்த காணி உறுதியை மீட்க பண உதவி செய்யப்பட்டது. உறுதியும் மீட்கப்பட்டது.
ஒத்துளைத்த அனைவருக்கும் நன்றிகள்.
