பிளாஸ்ரிக் மீள் சுழற்சிக்கு கூடிய அளவிலான பிளாஸ்ரிக் போத்தல்களை சூழலில் இருந்து எடுத்து மீள்சுழற்சி செய்தல் எனும் நிகழ்வு இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஆழுகைக்கு உட்பட்ட கொத்தியாலடி பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வு.

பிளாஸ்ரிக் மீள் சுழற்சிக்கு கூடிய அளவிலான பிளாஸ்ரிக் போத்தல்களை சூழலில் இருந்து எடுத்து மீள்சுழற்சி செய்தல் எனும் நிகழ்வு இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

மீள்சுழற்சி செய்யும் இயந்திரத்தினை Ecoscindiles , coca cola நிறுவனங்கள் இணைந்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி.

 

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு

தெரிவு செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு எமது உடுவில் உப அலுவலகத்தில் 09.04.2024 அன்று எமது அலுவலக பொறுப்பதிகாரி தலைமையில் ஆரம்பமாகி நடைபெறுகிறது

 

சுன்னாகம் பொது நூலகத்தில் இன்று கண்காட்சியும் விற்பனையும் இடம் பெறுகின்றது

சுன்னாகம் பொது நூலகத்தில் இன்று கண்காட்சியும் விற்பனையும் இடம் பெறுகின்றது.

வலிகாமம் தெற்கு சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட சுன்னாகம் பொது நூலகத்தில் இன்று ( 03.04.2024) காலை 9.00 – 4.00 வரை எமது பிரதேச சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்னையும் கண்காட்சி இடம்பெறுகின்றது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேம்.

https://www.facebook.com/share/v/BuUE6BN88dUohCy2/?mibextid=qi2Omg

பொது அறிவித்தல்!!!!!

பொது அறிவித்தல்!!!!!
வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட சுன்னாகம் சந்தியிலிருந்து காங்கேசன்துறை வீதியின் இரு புறமும் ஒற்றை / இரட்டை நாள் வாகன தரிப்பு அறிவிப்பு பலகைகள் பொலிசாரின் வேண்டுகோளிற்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடனும் ஒத்துழைப்புடனும் நாட்டப்பட்டுள்ளன.
இது 08/04/2024 (திங்கட்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டு அதனை மீறுவோருக்கு பொலிசாரால் தண்டமாக ரூ.1000/= அறவிடப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்