உடுவில் உப அலுவலக எல்லைக்கு உட்பட்ட வியாபார நிலையங்களில் தொடர்ச்சியாக 3 மாதகால வாடகை பணம் செலுத்தாதவர்களை பரிசீலனை செய்தலும், இறுதி அறிவித்தல் கடிதம் விநியோகித்தலும்

உடுவில் உப அலுவலக எல்லைக்கு உட்பட்ட மருதனார்மட சந்தை தொகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் தொடர்ச்சியாக 3 மாதகால வாடகை பணம் செலுத்தாதவர்களை பரிசீலனை செய்தலும், இறுதி அறிவித்தல் கடிதம் விநியோகித்தலும். அத்துடன் வியாபார நிலையங்களின் வியாபார வரி கட்டுவதற்கான இறுதி அறிவித்தல் வழங்குதலும் இன்று 21.03.2024 இடம்பெற்றது

 

இன்றைய தினம் சமூகக் கண்காணிப்புக்குக் குழுக் கூட்டம் சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட கிராமங்களில் இடம் பெற்றது.

இன்றைய தினம் சமூகக் கண்காணிப்புக்குக் குழுக் கூட்டம் சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட கிராமங்களில் இடம் பெற்றது.

இதில் அலுவலக பொறுப்பதிகாரி, தொழிநுட்ப உத்தியோகத்தர், வருமானவரி பரிசோதகர், வட்டார அபிவிரித்தி உத்தியோகத்தர்கள் , மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,

தெரிவு செய்யப்பட்ட வீதிகள் –

ஜனசக்தி வீதி, உடுவில் பாடசாலைக் கிழக்குவீதி, அம்பலவானர் மிகுதி வேலை

ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்டபகுதிகளில் வியாபார உரிமம், வரிப் பரிசோதனையும் அறவீடு தொடர்பான இறுதி அறிவித்தல்

ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட குப்பிளான் தெற்கு, ஏழாலை தெற்கு, மயிலங்காடு, பரிசயப்புலம் ஆக பகுதிகளில் 2024ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமம், வரிப் பரிசோதனையும் அறவீடு தொடர்பான இறுதி அறிவித்தல் வழங்கலும் இன்று 19.03.2024 நடைபெற்றது.

 

சுன்னாகம் உப அலுவலக ஆளுகைக்கு உட்பட்ட. முகாந்திரநாராயனர் வீதி வியாபார நிலையங்களுக்கு வியாபார வரி இறுதி அறிவித்தல் வழங்குதல்,

சுன்னாகம் உப அலுவலக ஆளுகைக்கு உட்பட்ட. முகாந்திரநாராயனர் வீதி வியாபார நிலையங்களுக்கு வியாபார வரி இறுதி அறிவித்தல் வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான படிவங்கள் வழங்குதல்.
19/03/2024

 

“சர்வதேச பூச்சிய கழிவு” தினத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் கீழ் இன்று 14.03.2024 ஆம் திகதி தாவடி தெற்கில் அமைந்துள்ள மோகன் வீதிக்கு பொது சுகாதார பரிசோதகரின் தலைமையின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் களவிஜயத்தின் போது

“சர்வதேச பூச்சிய கழிவு” தினத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் கீழ் இன்று 14.03.2024 ஆம் திகதி தாவடி தெற்கில் அமைந்துள்ள மோகன் வீதிக்கு பொது சுகாதார பரிசோதகரின் தலைமையின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் களவிஜயத்தின் போது பொதுமக்களிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திண்மக்கழிவகற்றல் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் திண்மக்கழிவகற்றலின் முறையான தரம்பிரித்தல் சம்பந்தமான பொதுமக்களிற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் தரம்பிரித்தல் முறையை நடைமுறைப்படுத்த ஆயத்த நடவடிக்கைகளிற்கும் வழிகாட்டப்பட்டது.

வியாபார உரிமங்களுக்கான இறுதி அறிவித்தல் கடிதம் வழங்குதலும், விளம்பரப் பலகைகளுக்கான கட்டனப் படிவங்கள் வழங்குதலும்

வியாபார உரிமங்களுக்கான இறுதி அறிவித்தல் கடிதம் வழங்குதலும், விளம்பரப் பலகைகளுக்கான கட்டனப் படிவங்கள் வழங்குதலும் சுன்னாகம் உப அலுவலக உத்தியோகத்தர்களினால் இன்று சேர்.பொன்.இராமநாதன் வீதிக் கடைகளின் உரிமையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

உடுவில் உபஅலுவலகத்தின் இலவச ஆயுர்வேத வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “இலைக்கஞ்சி

ஆரோக்கிய நலன்கருதி 12.03.2024 இல் உடுவில் உபஅலுவலகத்தின் இலவச ஆயுர்வேத வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “இலைக்கஞ்சி தயாரித்தலும் பகிர்ந்துண்ணலும்” என்ற செயற்பாட்டில் பொதுமக்களும் அலுவலக உத்தியோகத்தர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

 

சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் ஒழுங்க படுத்தலும்

சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் ஒழுங்குபடுத்தலும் இன்று 11.03.2024 ஆம் திகதி
எமது சபையில் இடம்பெற்றது.

பொதுமக்களிடமிருந்து Visa Card மூலம் அறவீடுகளை மேற்கொள்வதற்குரிய உபகரணம்

பொதுமக்களிடமிருந்து Visa Card மூலம் அறவீடுகளை மேற்கொள்வதற்குரிய உபகரணம் எமது தலைமையகத்தில் மக்கள் வங்கியினரால் அறிமுகம் செய்யப்பட்டு அதனைச் செயற்படுத்தும் விதமும் எமது உத்தியோகத்தர்களுக்கு தெளிவுறுத்தப்பட்டது {28.02.2024 புதன்கிழமை}

 

முச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கு வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பதிவுள்ள Stickers வழங்கும் நிகழ்வு

சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குள் முச்சக்கரத் தரிப்பிடங்களில் தரித்து நின்று முச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கு வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பதிவுள்ள Stickers வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது