“சர்வதேச பூச்சிய கழிவு” தினத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் கீழ் இன்று 14.03.2024 ஆம் திகதி தாவடி தெற்கில் அமைந்துள்ள மோகன் வீதிக்கு பொது சுகாதார பரிசோதகரின் தலைமையின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் களவிஜயத்தின் போது பொதுமக்களிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திண்மக்கழிவகற்றல் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் திண்மக்கழிவகற்றலின் முறையான தரம்பிரித்தல் சம்பந்தமான பொதுமக்களிற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் தரம்பிரித்தல் முறையை நடைமுறைப்படுத்த ஆயத்த நடவடிக்கைகளிற்கும் வழிகாட்டப்பட்டது.