சுன்னாகம் உப அலுவலக ஆளுகைக்கு உட்பட்ட. முகாந்திரநாராயனர் வீதி வியாபார நிலையங்களுக்கு வியாபார வரி இறுதி அறிவித்தல் வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான படிவங்கள் வழங்குதல்.
19/03/2024
சுன்னாகம் உப அலுவலக ஆளுகைக்கு உட்பட்ட. முகாந்திரநாராயனர் வீதி வியாபார நிலையங்களுக்கு வியாபார வரி இறுதி அறிவித்தல் வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான படிவங்கள் வழங்குதல்.
19/03/2024
“சர்வதேச பூச்சிய கழிவு” தினத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் கீழ் இன்று 14.03.2024 ஆம் திகதி தாவடி தெற்கில் அமைந்துள்ள மோகன் வீதிக்கு பொது சுகாதார பரிசோதகரின் தலைமையின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் களவிஜயத்தின் போது பொதுமக்களிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் திண்மக்கழிவகற்றல் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் திண்மக்கழிவகற்றலின் முறையான தரம்பிரித்தல் சம்பந்தமான பொதுமக்களிற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் தரம்பிரித்தல் முறையை நடைமுறைப்படுத்த ஆயத்த நடவடிக்கைகளிற்கும் வழிகாட்டப்பட்டது.
வியாபார உரிமங்களுக்கான இறுதி அறிவித்தல் கடிதம் வழங்குதலும், விளம்பரப் பலகைகளுக்கான கட்டனப் படிவங்கள் வழங்குதலும் சுன்னாகம் உப அலுவலக உத்தியோகத்தர்களினால் இன்று சேர்.பொன்.இராமநாதன் வீதிக் கடைகளின் உரிமையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
ஆரோக்கிய நலன்கருதி 12.03.2024 இல் உடுவில் உபஅலுவலகத்தின் இலவச ஆயுர்வேத வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “இலைக்கஞ்சி தயாரித்தலும் பகிர்ந்துண்ணலும்” என்ற செயற்பாட்டில் பொதுமக்களும் அலுவலக உத்தியோகத்தர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.
சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் ஒழுங்குபடுத்தலும் இன்று 11.03.2024 ஆம் திகதி
எமது சபையில் இடம்பெற்றது.
பொதுமக்களிடமிருந்து Visa Card மூலம் அறவீடுகளை மேற்கொள்வதற்குரிய உபகரணம் எமது தலைமையகத்தில் மக்கள் வங்கியினரால் அறிமுகம் செய்யப்பட்டு அதனைச் செயற்படுத்தும் விதமும் எமது உத்தியோகத்தர்களுக்கு தெளிவுறுத்தப்பட்டது {28.02.2024 புதன்கிழமை}
சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குள் முச்சக்கரத் தரிப்பிடங்களில் தரித்து நின்று முச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கு வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பதிவுள்ள Stickers வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது
நிலைபேறான அபிவிருத்தி இலக்கின் அடிப்படையில் திண்மக்கழிவகற்றல் நடவடிக்கையினை சீர் செய்யும் முகமாக சுன்னாகம் கொத்தியாலடியில் திண்மக் கழிவுகளினை தரம் பிரித்து ஒப்படைக்க முடியும் என்பதனை பொதுமக்களுக்கு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் செயலாளரினால் அறிவிக்கப்படுகின்றது
வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பொது நூலக டிஜிட்டல் அறிவு மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ” Digital Inclusion Hub” உத்தியோகபூர்வமாக திங்கட் கிழமை (26/02/2024) திறந்து வைக்கப்பட்டது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.🎉இந்த மையமானது பார்வைக் குறைபாடுடைய தனி நபர்களின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது.
⭐புரட்சிகரமான “KIBO”சாதனம்⭐
இச் சாதனம் 60 இற்கும் மேற்பட்ட உலகளாவிய மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தை பயனர்கள் கேட்க,மொழி பெயர்க்க,டிஜிட்டல் மயமாக்க மற்றும் ஆடியோக்களை செயற்படுத்த உதவுகிறது.🌍🔊
டிஜிட்டல் உள்ளடக்கல் மையத்தினால் வழங்கப்படும் .
இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
Face book page- https://www.facebook.com/profile.php?id=100004819937339&mibextid=ZbWKwL
Youtube page- https://youtu.be/RClfn6uJy1A?si=V51hsCoDf-JWYfPD
LDSP திட்டத்தின் கீழ் உலக வங்கியின் பிரமுகர்கள் (Practice Manager’s Team) மருதனார்மட பொதுச்சந்தையினை பார்வையிட்ட போது..