சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட,
சுன்னாகம் பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர், அலுவலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு தரவுகள் எடுத்தனர்.
சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட,
சுன்னாகம் பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர், அலுவலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு தரவுகள் எடுத்தனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது நூலகத்தில் சுன்னாகம் அலுவலக பொறுப்பதிகாரி திருமதி. வி . கெளரி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது .
பிரதம விருந்தினராக ஓய்வு நிலை பிரதம செயலாளர் திரு.வே.பொ பாலசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் வலிகாமம் கல்வி வலையம் திரு .ச. கிருபானந்தன் அவர்களும் மேலும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.இ.கிருஷ்ணகுனார் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் நூலகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி
வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் மருதனார்மடம் பொதுச்சந்தையின் தேங்காய் வியாபாரத்திற்கான கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா எமது சபையின் செயலாளரின் தலைமையில் 2024.04.29ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஆழுகைக்கு உட்பட்ட கொத்தியாலடி பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வு.
பிளாஸ்ரிக் மீள் சுழற்சிக்கு கூடிய அளவிலான பிளாஸ்ரிக் போத்தல்களை சூழலில் இருந்து எடுத்து மீள்சுழற்சி செய்தல் எனும் நிகழ்வு இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
மீள்சுழற்சி செய்யும் இயந்திரத்தினை Ecoscindiles , coca cola நிறுவனங்கள் இணைந்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி.
தெரிவு செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு எமது உடுவில் உப அலுவலகத்தில் 09.04.2024 அன்று எமது அலுவலக பொறுப்பதிகாரி தலைமையில் ஆரம்பமாகி நடைபெறுகிறது
சுன்னாகம் பொது நூலகத்தில் இன்று கண்காட்சியும் விற்பனையும் இடம் பெறுகின்றது.
வலிகாமம் தெற்கு சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட சுன்னாகம் பொது நூலகத்தில் இன்று ( 03.04.2024) காலை 9.00 – 4.00 வரை எமது பிரதேச சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்னையும் கண்காட்சி இடம்பெறுகின்றது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேம்.
https://www.facebook.com/share/v/BuUE6BN88dUohCy2/?mibextid=qi2Omg
பொது அறிவித்தல்!!!!!
வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட சுன்னாகம் சந்தியிலிருந்து காங்கேசன்துறை வீதியின் இரு புறமும் ஒற்றை / இரட்டை நாள் வாகன தரிப்பு அறிவிப்பு பலகைகள் பொலிசாரின் வேண்டுகோளிற்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடனும் ஒத்துழைப்புடனும் நாட்டப்பட்டுள்ளன.
இது 08/04/2024 (திங்கட்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டு அதனை மீறுவோருக்கு பொலிசாரால் தண்டமாக ரூ.1000/= அறவிடப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்
உடுவில் உப அலுவலக எல்லைக்கு உட்பட்ட மருதனார்மட சந்தை தொகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் தொடர்ச்சியாக 3 மாதகால வாடகை பணம் செலுத்தாதவர்களை பரிசீலனை செய்தலும், இறுதி அறிவித்தல் கடிதம் விநியோகித்தலும். அத்துடன் வியாபார நிலையங்களின் வியாபார வரி கட்டுவதற்கான இறுதி அறிவித்தல் வழங்குதலும் இன்று 21.03.2024 இடம்பெற்றது
இன்றைய தினம் சமூகக் கண்காணிப்புக்குக் குழுக் கூட்டம் சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட கிராமங்களில் இடம் பெற்றது.
இதில் அலுவலக பொறுப்பதிகாரி, தொழிநுட்ப உத்தியோகத்தர், வருமானவரி பரிசோதகர், வட்டார அபிவிரித்தி உத்தியோகத்தர்கள் , மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,
தெரிவு செய்யப்பட்ட வீதிகள் –
ஜனசக்தி வீதி, உடுவில் பாடசாலைக் கிழக்குவீதி, அம்பலவானர் மிகுதி வேலை
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட குப்பிளான் தெற்கு, ஏழாலை தெற்கு, மயிலங்காடு, பரிசயப்புலம் ஆக பகுதிகளில் 2024ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமம், வரிப் பரிசோதனையும் அறவீடு தொடர்பான இறுதி அறிவித்தல் வழங்கலும் இன்று 19.03.2024 நடைபெற்றது.